Head News
Today News
6 ஜன., 2011
cricket
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. மிர்பூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 87 ரன்னில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 370 ரன் குவித்தது. ஷேவாக் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 140 பந்தில் 14 பவுண்டரி, 5 சிக்சருடன் 175 ரன் எடுத்தார். வீராட் கோக்லி 83 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார்.
பின்னர் விளையாடிய வங்காளதேசம் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்தது. தமிம் இக்பால் 70 ரன்னும், கேப்டன் சகீப்-உல்-ஹசன் 55 ரன்னும் எடுத்தனர். முனாப்பட்டேல் 4 விக்கெட்டும், ஜாகீர்கான் 2 விக்கெட்டும், ஹர்பஜன், யூசுப்பதான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 175 ரன்கள் குவித்த ஷேவாக் ஆட்ட நாயகான தேர்வு பெற்றார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 200 ரன் குவித்தது சாதனையாக உள்ளது. நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போது அவரது சாதனையை பற்றி நினைக்கவில்லை. எனது பேட்டிங்கில் தான் அதிக கவனம் செலுத்தினேன். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இந்திய அணி விளையாடிய பிறகு ஓய்வு அறையில் நான் தெண்டுல்கரிடம் சென்று ரன் அவுட்டுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். ஓடுவதற்காக தெண்டுல்கர் என்னை அழைத்தபோது நான் அவரை கவனிக்காமல் பந்தை கவனித்தேன். இதனால் துரதிருஷ்டவசமாக அவர் ரன் அவுட் ஆனார்.
ஸ்ரீசாந்தை தவிர எல்லோருமே சிறப்பாக விளையாடினோம். வீராட் கோக்லியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவரது சதம் பொருத்தமானது. இந்த வெற்றி மூலம் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. 2007-ம் ஆண்டு உலக கோப்பையில் வங்காள தேசத்திடம் தோற்றோம். அதற்கு பழிவாங்க 4 ஆண்டுகள் காத்திருந்தேன். இது ஒரு பழிவாங்கும் ஆட்டம் தான். வங்காளதேச அணி டெஸ்டில் சிறப்பாக ஆடாவிட்டாலும் ஒருநாள் போட்டியில் நன்றாக ஆடிவருகிறது.
இவ்வாறு ஷேவாக் கூறினார்