...............மானியம் ஆடூர் இணைய தளம் உங்களை அன்புடன் வரவேற்கிறது-----JKP ..............e>

5 பிப்., 2015

12 ஜன., 2011

11 ஜன., 2011

கடலூர்

நெய்வேலி : கடந்த 43 ஆண்டுகளாக தமிழக முதல்வர்களாக சினிமாவை சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்து வரும் நிலைமை மாற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசினார். கடலூர் மாவட்டம் நெய்வேலியில் பா.ம.க., பயிற்சி கூட்ட அரங்கம் நேற்று நடந்தது. தலைவர் மணி தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ., வேல்முருகன் வரவேற்றார். நிர்வாகிகள் திருமால்வளவன், வடக்குத்து ஜெகன், வைத்தியலிங்கம், சக்கரவர்த்தி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் அன்புமணி ராமதாஸ் பேசியதாவது: தி.மு.க., - அ.தி.மு.க., உள்ளிட்ட அனைத்து கட்சிகளில் உள்ள வன்னியர் சொந்தங்களை பா.ம.க.,விற்கு கொண்டு வர நீங்கள் அனைவரும் போராட வேண்டும்.மதுவை ஒழிப்போம் என தி.மு.க., - அ.தி.மு.க.,வால் சொல்ல முடியுமா? ஆனால் பா.ம.க., ஆட்சிக்கு வந்தால் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு குறித்ததாகத் தான் இருக்கும். அதுபோல அனைவருக்கும் இலவச கல்வி, படித்து முடித்தவுடன் இலவச வேலைவாய்ப்பு. ஆனால் வேறு எதையும் இலவசமாக வழங்க மாட்டோம். பா.ம.க.,வைத் தவிர பிற கட்சிகள் வளர்ந்து, சரிந்து, முடிந்துபோன கட்சிகள். கடந்த 43 ஆண்டுகளாக தமிழக முதல்வராக சினிமாவைச் சேர்ந்தவர்கள் மட்டுமே இருந்த நிலை மாற வேண்டும். பா.ம.க., தயவு இல்லாமல் யாரும் ஆட்சி அமைக்க முடியாது. நெய்வேலி தொகுதியில் பா.ம.க., தனித்து நின்றாலே ஜெயிக்கும்.
பா.ம.க.,விற்காக உழைத்து கட்சியிலிருந்து விலகியவர்களை சந்தித்து அவர்களுக்கு சால்வை அணிவித்து நான் கவுரவிக்க வேண்டும். இவ்வாறு அன்புமணி ராமதாஸ் பேசினார். பா.ம.க., நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
அம்பானி மகனுக்கு கிடைக்கும் தரமான அதே கல்வி, என் சமுதாய மக்களுக்கும் கிடைக்க போராடுவேன். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் கூட இருக்காது. நமது கட்சியில் வயதானவர்கள் விலைபோய் விடுவார்கள். ஆனால் இளைஞர்கள் விலை போக மாட்டார்கள். தேர்தலின்போது, கொள்ளையடித்த பணத்திலிருந்து 500, 1000 ரூபாய் என அவர்கள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் உனக்கு தான் ஓட்டுப்போடுவோம் எனக்கூறி, அவர்கள் தரும் பணத்தை வாங்கி கொண்டு மாம்பழத்திற்கு ஓட்டு போடுங்கள். ஏனென்றால் அவர்கள் உங்களிடம் கொள்ளையடித்த பணத்தை தான் உங்களுக்கு திரும்பித் தருகின்றனர். இவ்வாறு பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பேசினார்.கூட்டணி இல்லை கூட்டம் முடிந்தவுடன் மேடையில் இருந்து இறங்கிய டாக்டர் ராமதாசிடம் டில்லிக்குச் செல்லும் கருணாநிதி விமான நிலையத்தில் நிருபர்களிடம் பேசும்போது பா.ம.க., தி.மு.க.,விடம் தான் உள்ளது என கூறியுள்ளாரே என கேட்டதற்கு, "நாங்கள் இப்போதைக்கு யாருடனும் கூட்டணி இல்லை. நாங்கள் எந்தக் கட்சியோடு கூட்டணி அமைப்போம் என்பது குறித்து ஓரிரு நாளில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம்' என தெரிவித்தார்.

6 ஜன., 2011

cricket


உலக கோப்பை கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கியது. மிர்பூரில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 87 ரன்னில் வங்காளதேசத்தை வீழ்த்தியது. முதலில் விளையாடிய இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 370 ரன் குவித்தது. ஷேவாக் ஆட்டம் அதிரடியாக இருந்தது. அவர் 140 பந்தில் 14 பவுண்டரி, 5 சிக்சருடன் 175 ரன் எடுத்தார். வீராட் கோக்லி 83 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்சருடன் சதம் அடித்தார்.

பின்னர் விளையாடிய வங்காளதேசம் அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 283 ரன் எடுத்தது. தமிம் இக்பால் 70 ரன்னும், கேப்டன் சகீப்-உல்-ஹசன் 55 ரன்னும் எடுத்தனர். முனாப்பட்டேல் 4 விக்கெட்டும், ஜாகீர்கான் 2 விக்கெட்டும், ஹர்பஜன், யூசுப்பதான் தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள். 175 ரன்கள் குவித்த ஷேவாக் ஆட்ட நாயகான தேர்வு பெற்றார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தெண்டுல்கர் ஒருநாள் போட்டியில் 200 ரன் குவித்தது சாதனையாக உள்ளது. நான் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த போது அவரது சாதனையை பற்றி நினைக்கவில்லை. எனது பேட்டிங்கில் தான் அதிக கவனம் செலுத்தினேன். ஆடுகளம் பேட்ஸ்மேன்களுக்கு ஏற்ற வகையில் இருந்தது. இந்திய அணி விளையாடிய பிறகு ஓய்வு அறையில் நான் தெண்டுல்கரிடம் சென்று ரன் அவுட்டுக்காக மன்னிப்பு கேட்டுக்கொண்டேன். ஓடுவதற்காக தெண்டுல்கர் என்னை அழைத்தபோது நான் அவரை கவனிக்காமல் பந்தை கவனித்தேன். இதனால் துரதிருஷ்டவசமாக அவர் ரன் அவுட் ஆனார்.

ஸ்ரீசாந்தை தவிர எல்லோருமே சிறப்பாக விளையாடினோம். வீராட் கோக்லியின் ஆட்டம் மிகவும் அபாரமாக இருந்தது. அவரது சதம் பொருத்தமானது. இந்த வெற்றி மூலம் இந்திய அணியின் தொடக்கம் சிறப்பாக அமைந்தது. 2007-ம் ஆண்டு உலக கோப்பையில் வங்காள தேசத்திடம் தோற்றோம். அதற்கு பழிவாங்க 4 ஆண்டுகள் காத்திருந்தேன். இது ஒரு பழிவாங்கும் ஆட்டம் தான். வங்காளதேச அணி டெஸ்டில் சிறப்பாக ஆடாவிட்டாலும் ஒருநாள் போட்டியில் நன்றாக ஆடிவருகிறது.

இவ்வாறு ஷேவாக் கூறினார்

5 ஜன., 2011

live show

http://www.99counters.com/member.php


widgeo.net

Welcome